ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!
17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருக்கும் இடமளிக்கப்படவில்லை. இது கிரிக்கெட் உலகில் அதிருபதியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இருவருமே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் அவர்கள் இந்த தொடரில் விளையாட தகுதியானவர்கள் என்று விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் “ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஆகிய இருவரும் மிகவும் அரிதான வீரர்கள். ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக விளையாடுவதில்லை. அணிக்காக விளையாடுபவர்கள். ஆனால் நான் அவர்கள் இடத்தில் இருந்தால் கண்டிப்பாக இனிமேல் அந்த பலபரீட்சையை செய்யாமல் எனக்காக விளையாடுவேன். ஏனென்றால் நான் முதலில் அணியில் எனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.