1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 மே 2025 (19:16 IST)

இன்று சிஎஸ்கே - கேகேஆர் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.
 
சற்றுமுன் நடைபெற்ற டாஸில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து சென்னை அணி இன்னும் சில நிமிடங்களில் பந்து வீச தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிஎஸ்கே அணி வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே, இந்த போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் இல்லாததாகவே பார்க்கப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில், கேகேஆர் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 13 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சிறிய வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை அணிக்காக கான்வே மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், இரு அணிகளின் ஆடும் லெவனில் உள்ள வீரர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
 
சிஎஸ்கே ஆடும் லெவன்:
அயூஷ் மஹத்ரே, உர்வில் படேல், டெவான் கன்வே, ரவீந்திர ஜடேஜா, டியூவால்ட் பிரெவிஸ், ஆர். அஸ்வின், எம்.எஸ். தோனி, அஞ்சுல் கம்போஜ், நூர் அகமத், கலீல் அகமத்,  பதிரானா
 
இம்பாக்ட் பிளேயர்கள்: 
சிவம் துபே, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ்
 
கேகேஆர்  ஆடும் லெவன்:
சுனில் நரேன், ரஹ்மானுல்லா குர்பாஸ் , அஜிங்க்ய ரஹானே , அங்க்ரிஷ் ரகுவன்ஷி, மணிஷ் பாண்டே, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், மொயின் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி
 
இம்பாக்ட் பிளேயர்கள்:
ஆன்ரிச் நோர்ட்ஜே, மயங்க் மார்க்கண்டே, ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், லவ்நித் சிஸோடியா
 
 
Edited by Siva