1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 மே 2025 (12:45 IST)

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

நேற்றைய போட்டியில் முக்கிய திருப்பமாக  அதிக ரன்கள் விட்ட கலீல் அகமதின் மீது நம்பிக்கை குறையவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த முக்கிய தருணம் கலீல் அகமது வீசிய 19ஆவது ஓவர். அந்த ஓவரில் மட்டும் ஆர்சிபியின் ரொமாரியோ ஷெப்பர்டு 33 ரன்கள் அடித்தார். மொத்தமாக கலீல் 3 ஓவர்களில் 65 ரன்கள் விட்டார்.

ஆர்சிபி முதலில் பேட் செய்து 213 ரன்கள் எடுத்தது. சென்னை, 20 ஓவர்களில் 211 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

போட்டிக்குப் பிறகு பேசிய ஃபிளெமிங், “இந்த சீசனில் கலீல் எங்களுக்கு நல்ல பங்களிப்பு அளித்துள்ளார். அதனால்தான் அன்ஷுல் கம்போஜை விட அவரை தேர்வு செய்தோம். கம்போஜ் சீராக பந்து வீசுகிறார். ஆனால், கலீலால் இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

“ஒரு ஓவர் கூட நமக்குக் கிடைத்திருந்தால் முடிவு வேறு மாதிரியாகியிருக்கும். கடைசி ஓவர்களில் கவனம் தேவை. இந்த சீசன் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், சில வீரர்களின் தனிப்பட்ட சாதனைகள் பாராட்டப்பட வேண்டியவை. அடுத்த ஆண்டு நன்றாக திரும்புவோம்,” என ஃபிளெமிங் நம்பிக்கை தெரிவித்தார்.

Edited by Siva