1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Elon Musk Announces Free SpaceX Share for Every Child in the US

அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் பங்கு கொடுக்கும் எலான் மஸ்க்.. எவ்வளவு தெரியுமா?

எலான் மஸ்க்
அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின்  தலா ஒரு பங்கை இலவசமாக வழங்கப்போவதாக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
இது குறித்துத் தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2027-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சுமார் 7.2 கோடி குழந்தைகளுக்கு தனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் இருந்து தலா ஒரு பங்கை வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு $146-க்கு வர்த்தகமாகி வரும் நிலையில், இந்த திட்டத்தின் மொத்த சந்தை மதிப்பு தோராயமாக 10.5 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88,000 கோடி ஆகும்.
 
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்  தனது 5% பங்குகளை பொதுநல நிதியத்திற்கு ஒதுக்குவதாக அறிவித்த நிலையில், "பங்குகளை ஒரு நிதியத்திற்கு தருவதற்கு பதிலாக, நேரடியாக பொதுமக்களுக்கே கொடுப்பதே சிறந்தது" என்று கூறி மஸ்க் இத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.
 
சட்ட நடைமுறைகள், வயது வரம்பு மற்றும் வரிக் கொள்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவின் எதிர்கால தலைமுறையினரை ஆரம்பக்கட்டத்திலேயே பங்குச்சந்தை முதலீட்டாளர்களாக மாற்றும் மிகப்பெரிய முயற்சியாக இது பார்க்கப்படும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் போராட்டம்.. அனுமதி மறுத்த காவல்துறை.. தடை மீறப்படுமா?