1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
  4. we have to dispose some things before diwali

தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்

diwali
வருகிற நவம்பர் 8ம் தேதி அமாவாசையுடன் தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. பெரியோர்களை வழிபடும் அமாவாசையோடு தீபாவளி வருவது சிறப்பான நாளாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், தீபாவளிக்கு முன்பு வீட்டில் என்னென்ன பொருளையும் வெளியே வீசினால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

தீபாவளி என்றாலே புத்தாடைகள் அணிவது, இனிப்பு சாப்பிடுவது, எண்ணெய் தேய்த்து குளிப்பது, பட்டாசுகள் வெடிப்பது என்று மட்டும் பலரும் நினைக்கிறார்கள்.. தீபாவளி செல்வத்தின் அடையாளமான மகாலட்சுமியே நாம் வீட்டிற்கு வரவேற்கும் நிகழ்வாகவே தீபாவளி பார்க்கப்படுகிறது.

அதற்காகத்தான் தீப ஒளிகளை ஏற்றுகிறோம் என முன்னோர்கள் சொன்னார்கள். அதனால்தான் தீபாவளியன்று வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடு சுத்தமாக இருந்தால்தான் நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் சொல்கிறது..

வீடு அசுத்தமாக இருந்தால் எதிர்மறை ஆற்றல் உருவாகி லட்சுமி தேவி குடிவர மாட்டாள் எனவும், பண பிரச்சனையை அதிகரிக்கும் எனவும் சாஸ்திரம் சொல்கிறது. அதை தவிர்ப்பதற்கு வீட்டிலிருந்து பல பொருட்களை வெளியேற்ற வேண்டும்.

அதாவது பழைய மற்றும் கிழிந்த காலணிகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது.. அதேபோல் உடைந்த சிலைகள் மற்றும் படங்களை வீட்டின் பூஜை அறையிலிருந்து அகற்றவேண்டும்.. சேதமடைந்த சமையல் பாத்திரங்களையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. மேலும் ஓடாத மற்றும் பழுதான கடிகாரங்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அது வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு