1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Benjamin Netanyahu’s Fate Hangs in Balance as Israel Exit Polls Show No Clear Winner

இஸ்ரேல் தேர்தல் எக்சிட்போல் முடிவுகள்... யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காதா? நெதன்யாகும் நிலைமை என்ன ஆகும்?

nethanyagu
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில்  வாக்குப்பதிவு முடிந்து வெளியான கருத்துக் கணிப்புகள்   பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எதிர்காலம் பெரும் சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதைக் காட்டுகின்றன. 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், நெதன்யாகுவின் ஆளும்கட்சி கூட்டணி 50 இடங்களை மட்டுமே பெறும் என முன்னணி ஊடகங்களான சேனல் 13, சேனல் 12 மற்றும் கான்  ஆகியவை கணித்துள்ளன.
 
அதேவேளையில், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்காட்  தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 53 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. அரபு பின்னணி கொண்ட கட்சிகள் 17 முதல் 18 இடங்களைப் பெறக்கூடும் எனக் கணிப்புகள் கூறுகின்றன. தனிப்பெரும் கட்சியாக நெதன்யாகுவின் 'லிகுட்'  கட்சி உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
 
இம்முறை தேர்தலில் வாக்குப்பதிவு 77.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, "மக்கள் நெதன்யாகு ஆட்சியைப் புறக்கணித்து விட்டார்கள்" என ஐசென்காட் வெற்றிக் முழக்கம் எழுப்பியுள்ளார். இருப்பினும், இறுதி முடிவுகள் வரும் வரை யார் ஆட்சியமைப்பார்கள் என்பதில் உறுதியற்ற சூழலே நீடிக்கிறது. ஒருவேளை எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலைச் சந்திக்க நேரிடும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பிளைதுபாய் கேப்டனுக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் அளித்த உயரிய விருது.. நம்மூர் ராகுல் காந்தி மெளனம் ஏன்?