திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (08:13 IST)

6 மாசத்துல ஆதவ் மனம் மாறுவாரா? இல்ல திருமா அணி மாறுவாரா? - தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி

tamilisai

விசிக கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கட்சி தலைவர் திருமாவளவன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பல கட்சிகளும் விமர்சித்து வந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவை தற்காலிக நீக்கம் செய்து திருமாவளவன் அறிவித்தார்.

 

அதை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

 

சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, விசிக ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் இருப்பதாக பேசியிருந்ததற்கு பதில் கேள்வி எழுப்பிய திருமாவளவன் “விடுதலை சிறுத்தைகள் கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டிருக்கிறார். பாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை அவர் முதலில் சொல்லட்டும். பின்னர் நான் பதிலளிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்
 

 

இந்நிலையில் திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் “ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்... அண்ணன் திருமா அறிவிப்பு.. ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா... அல்லது திருமா  அணி மாறுவாரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தொடர்ந்து சில கட்சி பிரமுகர்கள் திருமா கூட்டணியில் அணி மாறுவார் என பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K