வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!
பாகிஸ்தான் உளவுத்துறையினர், வாட்ஸ் அப்பில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாக வேடம் கொண்டு இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு தகவல்களை பெற முயற்சிக்கும் நிகழ்வுகள் நிலவி வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 7ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. 10ம் தேதி மாலை 5 மணிக்கு போர் நிறுத்தம் அமல்ப்டுத்தப்பட்டது.
இந்த சூழலில், வாட்ஸ் அப்பில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்று வேடமிட்டு, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் தகவல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளது.
அதன்படி, 7340921702 என்ற வாட்ஸ் அப் எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இந்த எண்ணை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளாக வேடமிட்டு பயன்படுத்துகின்றனர்.
Edited by Siva