1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay sangeetha divorce case enquiry today

விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு விசாரணை!.. சமரச மையத்துக்கு போவார்களா?..

sangeetha
முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தை அணுகினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் ‘நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை?’ என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

விரைவில் வக்காலத்து தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி விஜய், சங்கீதா இருவரையும் சமரச மையத்திற்குதான் அனுப்ப வேண்டும் எனக் கூறி வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதி வழக்கு தள்ளி வைத்தார்.

இந்த நிலையில்தான் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. அநேகமாக இன்று முதல்வர் விஜயும், அவரது மனைவி சங்கீதாவும் சமரச மையத்திற்கு செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

மேலும், இன்றைய விசாரணையில் முதல்வர் விஜயும், அவரின் மனைவி சங்கீதாவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக மாட்டார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக எம்பிக்கள் வருவார்களா?