1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 மே 2025 (17:12 IST)

மதுரை கலெக்டரை மாற்ற கோரி விசிக மறியல் போராட்டம்: பெரும் பரபரப்பு..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியில் டோல்கேட் இயங்கி வருகிறது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இந்த வழியாக சென்னைக்கும், திருச்சிக்கும் செல்கின்றன.
 
இன்று மதிய நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன் மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட கட்சி ஆதரவாளர்கள், பெண்கள் உட்பட, டோல்கேட்டை முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
 
அவர்கள் "மதுரை மாவட்ட கலெக்டர் எங்கள் கட்சியின் கூட்டங்களை தடை செய்கிறார், கொடியேற்ற விழாவுக்கு இடையூறு செய்கிறார்" என குற்றம்சாட்டி, அவரை உடனே மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.
 
மறியலால் டோல்கேட் முன் வாகனங்கள் நின்றுவிட்டன. சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் இருபுறத்திலும் ரோட்டில் வாகனங்கள் குவிந்து நின்றதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
 
தகவல் கிடைத்ததும் மேலூர் டிஎஸ்பி சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, போராட்டக்காரர்கள் தங்களது முற்றுகையை நிறுத்தினர்.
 
Edited by Mahendran