1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 மே 2025 (13:50 IST)

இன்றும், நாளையும் வெளுக்கப் போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Rain

தமிழ்நாட்டில் கோடை வெயில் நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயிலின் உஷ்ணம் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. அக்கினி வெயிலின் தொடக்க காலம் என சொல்லப்பட்ட நேற்று முதலாகவே மழை தொடர்கிறது.

 

இந்நிலையில் இன்றும், நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

அதுபோல நாளை கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலைப்பாங்கான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு கனமழை அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K