திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 12 டிசம்பர் 2024 (12:40 IST)

அடங்​கமறு, அத்து​மீறு என்று இருந்த விசிக அடங்​கிப் போ, குனிந்து போ என மாறிவிட்டது: எச்.ராஜா..!

H Raja
அடங்க மறு ஆத்து மீறு என்று இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை கொள்கை தற்போது அடங்கிப் குனிந்து கூனிப்போ என்று மாறிவிட்டது என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா அவர்களிடம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அடங்க மறு அத்து மறு என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தற்போது இல்லை. அண்மைக்காலமாக முதல்வர் ஸ்டாலின் அடங்கி போக குனிந்து கூனி போ என்ற கொள்கைக்கு அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் மாறிவிட்டார்.
 
அந்த கொள்கையை அர்ஜுனா ஏற்க மறுத்ததால் அவரை திருமாவளவன் கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் என்று தெரிவித்தார்.
 
மேலும் மழை குறித்த பாதிப்பை மழை பாதிப்பு குறித்து அரசு கவலைப்படாமல் உள்ளது என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்கள் திமுக அரசை நீக்குவார்கள் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். தமிழகத்தில் மழை பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் பாதிப்பு குறித்த அறிக்கை அளித்த பிறகு மத்திய அரசு நிவாரண தொகையை வழங்கும் என்றும் அவர் கூறினார்.