புதன், 3 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், வடதமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, கடலூர் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் வெறும் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மெதுவாக செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததால் அதிக பாதிப்பு இருக்காது என்றும், மிதமான மழை மட்டுமே பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், தாழ்வு மண்டலம் நகரும் திசையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே இன்று வரை தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva