திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:50 IST)

'ஜல்லிக்கட்டு' வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழ் நாடு அரசு

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இப்போட்டி, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கொரொனா தொற்றைத் தவிர்க்கும் வகையில் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்த வழிகாட்டு   நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ் நாடு அரசு.
அதில்,

*ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு  அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.

*ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.

*ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள 2 பேர் மட்டுமே செல்ல அனுமதி எனவும், காளைகளுக்கு தேவையற்ற வலியை உண்டாக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*போட்டிகள் நடக்கும் நேரத்தில் அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

*அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த வேண்டும்.

* மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பார்வையாளர்கள் 300 பேர் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவுக்கே அனுமதி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.