1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 மே 2025 (20:09 IST)

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இன்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பதாக அறிவித்த பிறகான, அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியில் பயணிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அதிமுகவின் 16 தீர்மானங்களில் பெரும்பாலானவை திமுகவிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்களாக அமைந்துள்ளன. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, நீட் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும், மாநில சுயாட்சியில், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது, நீர் மேலாண்மை பாதுகாக்க தவறிய திமுகவிற்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு கண்டனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

 

இடையே இபிஎஸ் கொண்டு வந்த நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K