1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thambi ramaiyah comment out vijay is next mgr

விஜய் எம்.ஜி.ஆரா?!.. காலம் பாத்திக்கிட்டு இருக்கு!... தம்பி ராமையா பேட்டி!..

thambi ramaya
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டது. கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியுள்ளார். திரைப்பட நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சரானது எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய 2 பேர் மட்டுமே.

அதுவும் எம்.ஜி.ஆர் அரசியல் கட்சியை துவங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராக மாறினார். அதன்பின் விஜய்க்கு மட்டுமே அது நடந்திருக்கிறது. அதிலும் முதல் தேர்தலில் எம்.ஜி.ஆர் வாங்கியதை விட கூடுதலாக இரண்டு சதவீதம் அதிக வாக்குகளை விஜய் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

இதையடுத்து எம்.ஜி.ஆரை விஜய் தாண்டி விட்டார் என பலரும் பேசி வருகிறார்கள்
. ஒருபக்கம் விஜய்தான் அடுத்த எம்ஜிஆர் என்று தவெகவினரு பேசி வருகிறார்கள். சட்டசபையில் எம்.ஜி.ஆருக்கு பின்  நான்தான் என்று விஜயே ஒரு முறை பேசினார்.

இந்நிலையில் நடிகர் தம்பி ராமையாவிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ‘எம்.ஜி.ஆருக்கு இணையாக ஒப்பிடுவதை காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.. அப்படி பேசுவ்வது விஜய் மீது அன்பு கொண்டவர்களின் வேலையாக இருக்கலாம்.. ஆனால், ஒப்பிட்டுக்கு தகுதியானவர்களா என்பதை காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என பதில் அளித்து விட்டு சென்றார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க கூடாது: மின்வாரியத்திற்கு முதல்வர் விஜய் உத்தரவு -