1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 மே 2025 (10:20 IST)

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

assembly
மத்திய அரசு கல்விக்கென ஒதுக்க வேண்டிய நிதியை வழங்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
 
இதில், "பிஎம் ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்‌ஷா திட்டங்களின் கீழ் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதை சட்டவிரோதமானது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் கல்வி மேம்பாட்டு பணிகளில் பெரும் இடையூறாக உள்ளது என்பதும், அந்த நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும், தேசிய கல்விக் கொள்கையை  அமல்படுத்தாததற்காக நிதி வழங்கப்படாமல் இருப்பது ஒரு ஒழுங்கற்ற நடவடிக்கையாகவும், அரசியல் அடிப்படையில் மாநிலத்தை தண்டிப்பதற்கான முறையாகவும் விளக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கின் மூலம், மாநில அரசு கல்வியில் சமநிலை மற்றும் நிதி பகிர்வில் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் போராடி வருகிறது.
 
இது போன்ற நடவடிக்கைகள், மத்திய - மாநில உறவில் சமநிலை தேவையை மீண்டும் வலியுறுத்துகின்றன.
 
Edited by Mahendran