1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:54 IST)

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

மறைந்த திரு. கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும்  திமுக  அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது என பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
"பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? 
 
சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?
 
அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் திரு. சேகர் பாபு  அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
 
மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran