வியாழன், 30 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (19:22 IST)

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அதன் தலைவர் விஜய் தனது அரசியல் எதிரிகள் யார் என்பதையும், தனது கட்சியின் நிலைப்பாட்டையும் தெளிவாக விளக்கினார்.
 
விஜய் தனது உரையில், "நமக்கு ஒரே கொள்கை எதிரி, ஒரே அரசியல் எதிரி தான். நமது கொள்கை எதிரி பாஜக, ஒரே அரசியல் எதிரி திமுகதான்" என்று திட்டவட்டமாகக் கூறினார். 
 
கூட்டணி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சி நமது தவெக அல்ல. இந்த பாசிச பாஜகவுடன் நேரடி அல்லது மறைமுகக் கூட்டணி வைப்பது? பாசிச பாஜகவுடன் மறைமுகக் கூட்டுக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா?
 
 "பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது" என்று குற்றம் சாட்டினார். மேலும், தனது அரசியல் வருகை அடைக்கலம் தேடி வந்தது அல்ல என்றும், "படைக்கலனுடன் வந்துள்ளேன்" என்றும் குறிப்பிட்டார். 
 
"வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கிறேன். மக்களுக்குப் பணி செய்து கிடப்பதே என் கடன்" என்று கூறி தனது அரசியல் பயணத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
 
மாபெரும் இளைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும்" என்று கூறினார்.
 
Edited by Siva