1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:49 IST)

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

Tamilnadu BJP

அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும், சில முரண்பாடுகளும் தொடர்ந்து வரும் நிலையில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட அதிமுக, பின்னர் கூட்டணியிலிருந்து விலகியிருந்தது. சமீபத்தில் அதிமுகவினரின் டெல்லி விசிட்டை தொடர்ந்து சென்னையில் அமித்ஷா வருகையின்போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

 

இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியதும், இல்லை தேர்தலில் மட்டுமே கூட்டணி, ஆட்சியில் கூட்டணி அமைப்பதாக பேசவில்லை என அதிமுக கூறி வருகிறது.

 

இந்நிலையில் புதிதாக தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ள பாஜகவினர் அதில் “வருங்கால முதல்வரே” என குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணியா? அல்லது ஆட்சியில் கூட்டணியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

Edit by Prasanth.K