எல்லாம் போச்சி!.. அடுத்து என்ன பண்றது?. மன உளைச்சலில் சீமான்!...
15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை தொடங்கியவர் சீமான். அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு எதிராக தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்ய தொடங்கினார். எனவே திராவிட கட்சிகளுக்கு மாற்றம் விரும்பியவர்கள் சீமானை ஆதரித்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் வாக்க வங்கி கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. 2024 பாராளுமன்ற தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத போதும் நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவீத வாக்குகள் அதாவது 30 லட்சம் வாக்குகள் கிடைத்தது..
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டனர். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதோடு காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியடைந்தார். மேலும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்தது..
இதையடுத்து விரக்தியின் உச்சத்தை சீமான் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. பல வருடங்களாக கத்தி கத்தி பேசியும் இந்த மக்கள் நம்மை கைவிட்டு விட்டார்கள் என்று அவர் நினைக்கிறாராம். அதனால்தான் இடைத்தேர்தல் முடிவு வெளியானதிலிருந்து தற்போது வரை அவர் வெளியே வரவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.. கட்சி அலுவலகத்துக்கும் வரவில்லை.. நிர்வாகிகளிடமும் பேசாமால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாராம்.
அதோடு, தனித்துப் போட்டி என்பதை கைவிட்டு விட்டு ஏதேனும் ஒரு கூட்டணியில் இணையாவிட்டால் கட்சி நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்று விடுவார்கள் என நிர்வாகிகள் எச்சரித்திருப்பதால் சீமான் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்.