இதிலாவது வெற்றி கிடைக்குமா?!.. இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த சீமான்!..
15 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர் சீமான். திரைப்பட இயக்குனராக இருந்தவர் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழ் தேசியத்தை கொள்கையாக வைத்திருக்கிறார். திராவிட கட்சிகளான அதிமுக, திமுக இரண்டையும் கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார்.
எனவே, மாற்றத்தை விரும்புபவர்கள் சீமானுக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் வாக்கு வாங்கி 8 சதவீதமாக உயர்ந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்றது. சுமார் 30 லட்சம் பேர் அந்த கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.
ஆனால் சட்டமன்ற தேர்தலில் விஜயின் வருகை காரணமாக நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 4 சதவீதமாக குறைந்தது. அதோடு ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை. காரைக்குடியில் தொகுதியில் போட்டியிட்ட சீமானும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில்தான் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார். மதுராந்தகம் தொகுதிக்கு ஜானகிராமனும், தாராபுரத்திற்கு கார்த்திகாவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி என்பவர் போட்டியிடுகிறார்..
சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட சீமானுக்கு வெற்றி கிடைக்காத நிலையில் இடைத்தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..