1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (10:28 IST)

100 சவரன் நகைகள் கொள்ளை.. பெண்களுடன் உல்லாச வாழ்க்கை! - அதிர்ச்சியளிக்கும் ஞானசேகரன் வாக்குமூலம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் இருந்து 100 சவரனுக்கு மேல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவி மிரட்டி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

தொடர்ந்து ஞானசேகரன் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே பல குற்றங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2022-24ம் ஆண்டிற்கிடையே சென்னை பள்ளிக்கரணை பகுதியை குறிவைத்து பல வீடுகளில் தனியாளாக ஞானசேகரன் கொள்ளையடித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

பள்ளிக்கரணையில் 7 வீடுகளில் சுமார் 100 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள், பணத்தை கொள்ளையடித்த ஞானசேகரன் அதை கொண்டு பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததை தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொள்ளையடித்த நகைகள், ஜீப் உள்ளிட்டவை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Edit by Prasanth.K