1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ramadoss Withdraws Case Seeking Declaration as PMK Leader After Amicable Settlement

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு.. வாபஸ் பெற்றார் டாக்டர் ராமதாஸ்..

ராமதாஸ்
பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அதன் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளார். கட்சியில் நிலவிய உள்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் அதிகார மோதல்கள் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு பெரும் விவாத பொருளாகியிருந்தது. 
 
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு, சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
 
இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம், இந்த வழக்கினை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. 
 
தேர்தல் அரசியலில் பாமகவின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கூட்டணியமைப்பது தொடர்பாகவும் பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தச் சமரசம் அக்கட்சியினரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கும் கட்சிக்கும் இடையே சுமூகமான சூழல் திரும்பியுள்ளதாகத் தொண்டர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா கனிமொழி? விஜய்யின் பெண் வாக்காளர்களை இழுக்க முயற்சியா?