வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2025 (14:34 IST)

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்..!

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்..!
தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம், திருச்சியில் நடிகர் விஜய்யின் கூட்டத்திற்கு திரண்ட பிரம்மாண்டமான மக்கள் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறுமா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. சிலர் இது சாத்தியம் என்று கூற, வேறு சிலர் அது நடக்க வாய்ப்பில்லை என்று வாதிடுகின்றனர்.
 
இந்நிலையில், ரஜினிகாந்திடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. தனது அடுத்த திரைப்படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா புறப்பட்ட ரஜினிகாந்த், விஜய்யின் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கு, "நோ கமெண்ட்ஸ்" என்று கூறினார். ஒரு திரைக்கலைஞராக கேள்வி கேட்கப்பட்டபோதும், அவர் பதிலளிக்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆறு நாட்கள் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran