திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:59 IST)

பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமாகவும் போக்குவரத்திற்கு அனுமதி: காவல்துறை அறிவிப்பு..!

சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமாகவும் இன்றுமுதல் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த 2020ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தில் தாம்பரம் - விமான நிலையம் மார்க்கத்தில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் மறுமார்க்கத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் தற்போது இரு புறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு, அதற்கேற்ப பாலத்தில் தடுப்புகள் வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு இந்த  மேம்பாலத்தில் ஒருபுறம் மட்டும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் இருபுறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமும் போக்குவரத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran