திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:56 IST)

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணை நிற்ப்போம்! பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ விவகாரம் குறித்து பா ரஞ்சித்

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ வீட்டில் வேலை செய்ய வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ அவரது மனைவி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
 
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி இருவரும், தங்கள் வீட்டில் பணி செய்த ரேகாவை அடித்து துன்புறுத்தியதுடன், மதிவாணன் சிகரெட்டால் சூடு வைத்து, தலைமுடியை வெட்டி துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில்  புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீலாங்கரை மகளிர் போலீஸார், வீட்டு   வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!
 
 
Edited by Mahendran