திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:47 IST)

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அரசு அதை எடுக்கும்” - எம்.எல்.ஏ. கருணாநிதி

mla karunanidhi
குற்றம்சாட்டப்பட்டுள்ள என் மகன் மற்றும் மருமகள்  மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என்று எம்.எல்.ஏ. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில்  வேலை செய்து வந்த ரேகா என்ற பெண் ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் போலீஸார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீலாங்கரை மகளிர் போலீஸார் 4 பிரிவிகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என்று எம்.எல்.ஏ. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில். என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசிக்கிறார்.

அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது.

இச்சம்பவத்திற்கும் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கக வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.