சோத்துக்கு வழியில்ல!.. விஜய்க்கு வசதியான ரூம் கேட்குதா?!. பழனிச்சாமி கடும் தாக்கு!..
முதல்வர் ஜோசப் விஜயின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது தளத்துக்கு மாற்றப்படவிருக்கிறது. இதற்கான பணிகளை செய்ய ரூ.5 கோடியில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. தற்போது புனித ஜார்ஜ் பட்டையின் முதல் தளத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் அலுவலகம் அமைந்துள்ளது.
கடந்த பல வருடங்களாகவே பல முதல்வர்களும் இந்த அறையைத்தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இட பற்றாக்குறை காரணமாக முதல்வர் அலுவலகம் அதே தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்படவிருக்கிறது. அதற்கான பணிகள் இன்னும் மூன்று மாதங்களில் முடிக்கப்படவிருக்கிறது.
இன்று இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் சோத்துக்கு வழி இல்லாமல் திண்டாடிட்டு இருக்காங்க.. நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு.. இவருக்கு ஆடம்பர நவீன அறை வேணுமாம்.. இப்ப இருக்குற ரூம் பத்தாதா? நடிகர் இப்படித்தான் இருப்பாரு.. தலைவிதி என சொல்லியிருக்கிறார்.
மேலும். காவிரியில் நீரை பெற்று தராமல் தவெக அரசு ரீல் போடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. முழு நேரமும் அதே வேலையாக இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.