புதன், 3 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 டிசம்பர் 2025 (08:16 IST)

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென டெல்லி சென்றுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் புதிய கட்சி தொடங்குவதற்காக தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுவதுதான் இந்த பரபரப்புக்கு முக்கிய காரணம்.
 
தனது ஆதரவாளர்களை கொண்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை ஒரு கட்சியாக பதிவு செய்யவே ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளார் என்று சற்றுமுன் வெளியான தகவல் கூறுகிறது. அவர் கொச்சியிலிருந்து டெல்லிக்கு சென்றுள்ளார்.
 
டெல்லி சென்றுள்ள ஓ. பன்னீர்செல்வம், இன்று அங்குள்ள பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தலைமைடன் அவர் அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாஜக நிர்வாகிகளை சந்தித்த பின்னர், அவர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று, தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியாக பதிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது. 
 
ஓ.பி.எஸ் புதிய கட்சியை தனித்து ஆரம்பித்து, அதன் பிறகு அவர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுவது அரசியல் களத்தில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva