1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin decided non action against dmk

தேர்தலில் தோல்வி!.. எந்த நடவடிக்கையும் வேணாம்!.. ஸ்டாலின் எடுத்த முடிவு!..

stalin
2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார். 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக பலவீனமாக இருந்ததாலும், நடிகர் விஜய் அப்போதுதான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருந்தாலும் மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என திமுகவின் தலைமை உறுதியாக நம்பியது.

ஆனால் மக்களின் தீர்ப்பு வேறாக இருந்தது. 108 தொகுதிகளில் தவெக கூட்டணி ஆட்சியை அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலினே கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்றுப் போனார். திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது..

இதையடுத்து திமுகவின் தோல்வி பற்றி ஆராய கள ஆய்வுக்குழு, மறு சீரமைப்புக்குழு ஆகியவற்றை முக ஸ்டாலின் அமைத்தார். ஒருபகக்ம், பொதுமக்களிடமும் அவர் கருத்து கேட்டார். கிடைக்கும் கருத்துக்களின் அடிப்படையில் திமுகவில் பல மாற்றங்கள் நிகழும், பலரும் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள், மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதுவரை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போதைக்கு கட்சியில் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லிவிட்டாராம். முதலில் எதிர்க்கட்சி அரசியலை தீவிரப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் தவெகவை அம்பலப்படுத்துவோம்.. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம். எனவே, இடைத்தேர்தல் முடியும் வரை கட்சியில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள் அறிவாலய புள்ளிகள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... બધા વાંચો
அடுத்த கட்டுரையில்
ஸ்விக்கி, ஜொமைட்டாவை புறக்கணிக்க முடிவு.. ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு...