1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 மே 2025 (10:06 IST)

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

Vaiko
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த நவம்பர் மாதத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வைகோ தனது வீட்டில் திடீரென தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விழுதலில், அவருடைய கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சென்னை க்ரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை மதிமுக வட்டாரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
 
கடந்த ஆண்டு மே மாதத்திலும் அவர் தவறி விழுந்த நிலையில், வலது கை தோள்பட்டை எலும்பு முறிவுற்றது. அதன் காரணமாக வைக்கப்பட்டிருந்த பிளேட்டை அகற்றும் சிகிச்சைக்காக, கடந்த நவம்பர் மாதம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
தற்போது மீண்டும் ஏற்பட்ட காயம் குறித்து விரைவில் மதிமுக தலைமை அலுவலகம் அல்லது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran