முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவபழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திர வெயில் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கும் நிலையில், வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் மே இறுதி வாரத்தில் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, அதன் பிறகு அடுத்தடுத்த வாரங்களில் இந்தியாவிலும் மழை பெய்யும்.
ஆனால் இந்த முறை, தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, இரண்டு வாரங்கள் முன் கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva