நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. மழையும் பெய்ய வாய்ப்பு என தகவல்..!
தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் கூடிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளை அதாவது மே 4, ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளது. மே மாதம் முழுக்கவே வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், அதில் 25 நாட்கள் இந்த அக்னி நட்சத்திர காலம் இருக்கும்.
வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு கத்தரி வெயில் மே 4 அன்று துவங்கி மே 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்நாட்களில் வெப்பம் மிகுதியாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தற்போதும் தமிழகத்தின் பல இடங்களில் வெப்பநிலை 100° பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனுடன் கத்தரி வெயில் தொடங்குவதால் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் வளிமண்டல மாற்றங்களால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் லேசான கோடை மழை பதிவாகி வருகிறது. மேலும் சில பகுதிகளில் அடுத்த வாரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஆனாலும் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் நிலவுவதால், அதிக நேரம் வெளியில் செல்லும் பொது குடிநீர் மற்றும் கூலிங் பொருட்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.
Edited by Mahendran