1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 மே 2025 (09:21 IST)

சென்னையின் பில்ரோத் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

enforcement directorate
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு மற்றும் அசோக் நகர்  என 5 பகுதிகளில் அமைந்துள்ள சில தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இந்த சோதனை,  பில்ரோத் மருத்துவமனை உரிமையாளரின் வீட்டிலும், சாலிகிராமத்தில் வசிக்கும் பாண்டியன் என்பவரின் வீட்டிலும் நடைபெற்று வருகிறது. மேலும், விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அதிகாரியின் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த சோதனைகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடைக் சட்டம்  அடிப்படையில் நடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் வருமானத்தைவிட அதிக அளவிலான சொத்துகளை சேர்த்ததாக சந்தேகம் நிலவுகிறது.
 
முக்கியமாக, பாண்டியன் வீடு இதற்கு முன் 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சோதனைக்குட்பட்டது. தற்போது மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது. 
சோதனைகள் தொடரும் நிலையில், அதிகாரப்பூர்வ விளக்கம் விரைவில் வெளியாகும்  எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva