திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (21:57 IST)

வேன் மீது மோதிய லாரி.. சபரிமலை பக்தர்கள் காயம்!

accident
சபரிமலை சென்று திரும்பிய வேன் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி அருகே நான்கு வழிச்சாலையில், திருச்சியில் இருந்து மதுரைக்கு சீனி மூட்டைகள் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி எதிரே சபரிமலையில் இருந்து சுவாமி தரிசனம் முடித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணம் செய்த மேலூர் அருகே மங்களாம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45). சிங்கம்புணரி அருகே காளாப்பூரை சேர்ந்த வைரமணிகண்டன் (28) .
மற்றும் மோகன் உட்பட 5 பக்தர்கள் காயமடைந்த நிலையில், இதுகுறித்து தகவலறிந்த ஒத்தக்கடை காவல்துறை ரோந்து அதிகாரி ராஜேந்திரன், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நவாசுதீன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி காயமடைந்த பக்தர்களை மீட்டு, சிகச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்துக்குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.