திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (08:48 IST)

திடீரென பெயர்ந்து விழுந்த அங்கன்வாடி மையம் மேற்கூரை! - சிறுமி, பணியாளர் படுகாயம்!

anganwadi
மதுரையில் அங்கன்வாடி ஒன்றில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி, அங்கன்வாடி பணியாளர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை முத்துப்பட்டியில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வரக்கூடிய நிலையில் இன்று 13 குழந்தைகள்  அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு குழந்தைகள் மற்றும் 47வயது மதிக்கதக்க ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து, சுப்பிரமணியபுரம்போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்த தகவல் அறிந்ததும் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி இருந்த பெற்றோர்கள் பதறி அடித்து வந்து அவர்களுடைய குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதனால், அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.