1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 18 மே 2025 (11:56 IST)

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

ஹைதராபாத் நகரின் புகழ்பெற்ற சார்மினார் பகுதியில் உள்ள நகைக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 
 
குல்சார் ஹவுஸ் அருகிலுள்ள ‘ஸ்ரீ கிருஷ்ணா பியர்ல்ஸ்’ எனும் நகைக்கடையில் இன்று  அதிகாலை சுமார் 6 மணி அளவில் தீ வெடித்தது மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் முதலில் தரைத்தளத்தில் பரவிய தீ, பின் கண நேரத்தில் மேல்மாடிகளுக்கும் விரைந்து பரவியது. அப்போது அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
 
தகவலறிந்த தீயணைப்பு துறையினர்  11 வாகனங்களை உடனே அனுப்பி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ பரவல் மிக வேகமாக இருந்ததால், மீட்பு பணிகள் சவாலாகவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் 8 பேர் உயிரிழப்பு. 20-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என்றும், மீட்கப்பட்ட பலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
 
தீவிபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. இது குறித்த முழுமையான விசாரணை காவல்துறையால் நடந்து வருகிறது.
 
Edited by Mahendran