1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay talk in independence day

என் நெஞ்சில் குடியிருக்கும்!.. சுதந்திரதின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு...

vijay
இன்று கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு தேசியகொடி ஏற்றினார். அதன்பின் அவர் மக்கள் முன்பு பேசியதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். அனைவரும் இணையும் இடத்தில் சாதி, மதம், இனம் இல்லை. தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைதான். லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம். சுதந்திரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வளர்கிறோம்.

தற்போது தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. கொள்கைக்கு எதிரான விஷயங்களை தவெக அரசு நிச்சயம் எதிர்க்கும். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு கொடுப்போம். அதேநேரம், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம். கடந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் கைவிடப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 100 நாள் திட்டம் 125 நாட்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

சட்டம் - ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும். தமிழக அரசோடு மக்கள் துணை நிற்க வேண்டும். மக்கள் தான் ஆட்சியாளர்கள். வாருங்கள் எல்லாரும் சேர்ந்து கடமையை செய்வோம். வாக்காளர்கள் அரசோடு துணையாக இருக்க வேண்டும்"

அரசுக்கு எதிரான சக்திகளையும், சதிகளையும் முறியடிப்போம். மக்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும். லஞ்சம் இல்லாத தமிழகத்தை அமைப்போம். நம்பிக்கையோடு இருங்கள்.. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்’ என அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சுதந்திர தின விழாவில் திரிஷா!.. இதுக்கு ஒரு எண்டே இல்லயா!..