வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (09:27 IST)

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 34,497 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
 
மதுரை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கருவுற்றிருப்பதாக கூறப்படுகிறது.
 
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 18 வயதிற்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்பவர் மற்றும் அதற்கு துணை நிற்பவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்கிறது. இருப்பினும், இந்த சட்டம் பல இடங்களில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. 
 
படித்த பட்டதாரிகள் கூட இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சமூகத்தின் பல அடுக்குகளில் குழந்தை திருமணங்கள் வேரூன்றி இருப்பதை உணர்த்துகிறது. இந்த நிலையை மாற்ற, சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதோடு, மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
 
Edited by Siva