வியாழன், 14 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 13 ஆகஸ்ட் 2025 (13:58 IST)

ஆளுநரிடம் பட்டம் பெற மாட்டேன்! ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி! - நெல்லையில் பரபரப்பு!

RN Ravi

திருநெல்வேலியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கையால் பட்டம் பெற மாட்டேன் என மாணவி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32வது பட்டமளிப்பு விழா இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். 

 

பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் ஒவ்வொருவராக மேட்டைக்கு வந்து தங்களது பட்டத்தை கவர்னரிடம் காட்டி வாழ்த்து பெற்றுக் கொண்டு, போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது மேடைக்கு வந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி பட்டம் பெற வந்த ஜூன் ஜோசப் என்ற மாணவி, கவர்னரிடம் பட்டத்தை காட்டி வாழ்த்து பெறாமல், துணை வேந்தர் சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்று விட்டு, ஆளுனரை புறக்கணித்து சென்றார். இது பட்டமளிப்பு விழாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஜூன் ஜோசப் “ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருபவர். அதனால் அவரின் கையால் பட்டம் பெற நான் விரும்பவில்லை” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K