1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 16 ஜூலை 2025 (09:28 IST)

அப்படி ஒரு திருக்குறளே இல்லையே..! ஆளுநர் கொடுத்த விருதில் சர்ச்சை! - திரும்ப பெற முடிவு?

Thirukural

ஆளுநர் மாளிகை சார்பில் சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் இல்லாத திருக்குறளை விருதில் அச்சடித்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி வகித்து வரும் நிலையில் அடிக்கடி அவருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 13ம் தேதியன்று ஆளுநர் மாளிகை சார்பில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வழங்கப்பட்ட விருது கேடயத்தின் கீழ் திருக்குறள் ஒன்று இடம்பெற்றிருந்தது.

 

அது திருக்குறளின் வரிசை எண் 944ல் அமைந்துள்ள திருக்குறள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த எண்ணில் அப்படி ஒரு திருக்குறளே இல்லை என்பது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து தேடியதில் அந்த திருக்குறள், 1330 குறள்களில் எங்கேயுமே இல்லை என்று தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இல்லாத திருக்குறளை உருவாக்கி அச்சடித்து கொடுத்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை ஆளுநர் மாளிகை திரும்ப பெற்று, சரியான குறளை அச்சிட்டு புதிய விருது கேடயங்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

 

Edit by Prasanth.K