1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2025 (18:53 IST)

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

governor ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று  திடீரென டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீண்ட காலமாக ஒப்புதல் இன்றி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை வழங்கியது. ஏப்ரல் 8ம் தேதி, ஆளுநர் ஒப்புதல் இல்லாமலும் மசோதாக்கள் இயல்பாகவே நிறைவேற்றப்பட்டதாக கணிக்கப்படும் என நீதிமன்றம் தீர்மானித்தது.
 
இதனுடன், மசோதாக்களுக்கு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
 
இந்த அதிரடி தீர்ப்பை மையமாக வைத்து முக்கிய ஆலோசனைகளுக்காகவே ஆளுநர் ரவி டெல்லி சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட துறை அதிகாரிகளுடன் சந்தித்து, ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.
 
இதே வழக்கில், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியதை குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடுமையாக எதிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran