மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!
வீட்டு வாசலில் உள்ள இரும்பு கேட் கதவில் மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூர் அருகே காட்பாடி என்ற பகுதியில் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முருகன் என்பவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டு வாசலில் உள்ள இரும்பு கதவில் மின்சாரத்தை பாய்ச்சி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தரையிலும் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார்.
அவருடைய மனைவி அன்பழகி இதை அறியாமல் கதவை திறந்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி விடப்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் பாய்ச்சி ஏற்கனவே இரண்டு முறை தனது மனைவியை கொலை செய்ய முடிந்த முருகன் தற்போது மூன்றாவது முறையாகவும் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மனைவியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட கணவர் முருகன் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கட்டிய மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற கணவரால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Edited by Siva