வெள்ளி, 17 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 அக்டோபர் 2025 (13:59 IST)

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!
வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகளின் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று  தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஆரஞ்சு எச்சரிக்கை மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மஞ்சள் எச்சரிக்கை மாவட்டங்கள் : கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 15 இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran