தொடர்புடைய செய்திகள்
- இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாக உள்ளது: கார்கேவுக்கு எம்.ஏ.பேபி அனுப்பிய பரபரப்பு கடிதம்!
- பினராயி விஜயன் வீட்டில் சோதனை.. ED அதிகாரிகள் காரை அடித்து நொறுக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்..
- கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் நாளை பதவி ஏற்பு: ராகுல் காந்தி, விஜய் பங்கேற்பு!
- கேரளாவில் முதல்வர் யார்?.. 8 நாட்களாகியும் முடிவெடுக்க முடியாமல் திணறும் காங்கிரஸ்..
- தமிழகம், மேற்குவங்கம், கேரளா.. இந்தியா கூட்டணியின் 3 கட்சிகளுக்கு படுதோல்வி.. பாஜகவுக்கு மாற்றே இல்லையா?
பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தும் விவகாரம்: சட்டசபையில் காரசாரமான விவாதம்...
கேரள சட்டசபையில் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான விவாதம் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் குறித்து கேரள முதலமைச்சர் சதீசன் மற்றும் கல்வி அமைச்சர் சம்சுதீன் ஆகியோர் பேசிய கருத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் முந்தைய இடதுசாரி அரசு இத்திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் சதீசன், திட்டத்தை முடக்கி வைக்கும் நோக்கத்தோடுதான் அன்று கையெழுத்திட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பினராயி விஜயன், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1500 கோடிக்கும் அதிகமான மத்திய நிதியை பெறுவதற்காகவே தங்களது அரசு முயன்றதாகக் குறிப்பிட்டார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த வேண்டியதில்லை என்ற முடிவை எடுத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும், முன்பு இத்திட்டத்தை அரபிக்கடலில் வீசுவோம் என்று சூளுரைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள், இப்போது இதற்கு ஆதரவாக பேசுவது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என்றும் பினராயி விஜயன் சாடினார். இந்த மோதலால் கேரளா அரசியல் களம் சூடேறியுள்ளது.
Edited by Siva
