1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 மே 2025 (12:58 IST)

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

edappadi
இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்பதற்காக கோவை   வந்தடைந்த   எடப்பாடி கே. பழனிச்சாமி, செய்தியாளர்களிடம் பேசினார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின், நீதி ஆயோக் கூட்டங்களை மூன்று ஆண்டுகளாக புறக்கணித்தார். தற்போது திடீரென அதில் பங்கேற்றுள்ளார். ஏன் மூன்று ஆண்டுகள் பங்கேற்கவில்லை? மூன்றாண்டுகள் பங்கேற்றிருந்தால் தமிழக நலன்களுக்காகத் திட்டங்களைப் பெற்றிருக்கலாம் அல்லவா?
 
டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்று, அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. மக்கள் பிரச்னைக்கு இதுவரை செல்லாமல் தற்போது ஏன் சென்றுள்ளார்?
 
பிரதமர் மோடி, தமிழகத்திற்கு வரும்போது கருப்பு பலூன் காட்டிய ஸ்டாலின், தற்போது வெள்ளைக்கொடி பிடிக்கிறார். எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக வந்தபோது ஒரு நிலைப்பாடு. இரட்டை வேடம் போடும் கட்சி திமுக
 
அரக்கோணத்தில் ஒரு பெண் கொடுத்த புகாரை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், புகார் காலதாமதமாகவே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படுகிறது. பின்னர் புகார் கொடுத்த நபர் ஜாமீனில் வெளிவருகிறார். ஆனால், அந்தப் பெண் கொடுத்த புகார் பொதுவெளிகளில் வெளியே வந்துள்ளது. இதெல்லாம் வெளியே வரக்கூடாது என்பதுதான் சட்டம். ஆளுநரிடம் புகார் அளிக்க  சென்ற அந்தப் பெண்ணை ஆளுநரை சந்திக்க விடாமல் தமிழக காவல்துறை தடுத்துள்ளது. எவ்வளவு அலங்கோலமான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு அரக்கோணமே சாட்சி
 
இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார்? அதற்கான காரணங்கள் இனிமேல் வரும். இதுதான் ஆரம்ப கட்டம். இனிமேல் எப்படி பயப்படுகிறார் என்பது இனிமேல் தெரிய வரும்" என்று அவர் கிண்டலாகப் பேசினார். 
 
Edited by Siva