புதன், 5 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2025 (12:16 IST)

பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர்கள்! காவல் ஆணையர் அறிவுரை!

coimbatore commissioner

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்க வேண்டாம் என கோவை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

 

நேற்று முன் தினம் கோவை விமான நிலையம் பின்புறம் காரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூவர் சேர்த்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்த சிலர், அந்த பெண் இரவு நேரத்தில் ஏன் அங்கு சென்றார் என அந்த பெண்ணை குற்றம் சாட்டி பேசினர்.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் “பாதிக்கப்பட்ட பெண்ணை யாரும் விமர்சிக்க வேண்டாம். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல எல்லாருக்கும் உரிமை உள்ளது. தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்கக்கூடாது.

 

பாதிக்கப்பட்ட பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K