என் அப்பாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திமுகவின் கைக்கூலிகள்: அன்புமணி ஆவேசம்..!
தருமபுரி பென்னாகரத்தில் 100-வது நாள் நடைப்பயணத்தை நிறைவு செய்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றினார்.
"வரும் தேர்தலில் இந்த ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சி தோற்க வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் நம் கூட்டணியின் ஆட்சி வரும், அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அய்யா ஒரு சமூக சீர்திருத்தவாதி. ஆனால், அவரை சுற்றி இருந்து மனதை திசை திருப்பிய துரோகிகள் மற்றும் தி.மு.க.வின் கைக்கூலிகள் இருக்கும் வரை, நான் அங்கே சேர மாட்டேன்" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.
வன்னியர்களுக்குக் குறைந்தது 15% இடஒதுக்கீடு கேட்டு, டிசம்பர் 17-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 'சிறை நிரப்பும் போராட்டம்' நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். "வன்னியர் சமூகத்திற்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு, வரும் தேர்தலில் ஒரு ஓட்டுகூட போக கூடாது. இது சமூகநீதிப் பிரச்சினை," என்று வலியுறுத்திய அவர், தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அறைகூவல் விடுத்தார்.
Edited by Mahendran