வெள்ளி, 7 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2025 (11:57 IST)

கோவை வன்கொடுமை! தாமதமாக கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin

கோவையில் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கோவையில் விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் காரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை, மூன்று பேர் சேர்ந்து வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் நடந்த இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 

ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

 

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். 

 

மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!” என தெரிவித்துள்ளார்.

 

நேற்று முன் தினம் நடந்த சம்பவத்திற்கே இன்றுதான் கண்டனம் தெரிவிக்கிறீர்கள் என்றால் நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள் என்ற ரீதியில் எதிர்கட்சியினர் இதை விமர்சித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K